பிக்பாஸ் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் 8 இசையமைப்பாளர்கள் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் வெளியாகி கவனம்பெற்ற விக்கி டோனர் என்ற திரைப்படம், தாராள பிரபு என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. ஹரிஸ் கல்யாண், விவேக் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார்.
கதாநாயகியாக தன்யா ஹோப் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இசையமைக்க 8 இசையமைப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், அனிருத், ஷான் ரோல்டன், விவேக்-மெர்வின், மேண்ட்லி ப்ளூஸ், இன்னோ ஜெங்கா, காபர் வாசுகி, ஊர்கா பேண்ட், பரத் சங்கர் ஆகியோர் இதில் இசையமைக்கவுள்ளனர்.