நடிகர் சங்க வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவால் வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் உள்ளது. நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து பிறபித்த உத்தரவை எதிர்த்து பொது செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதே போல நடிகர்கள் நாசர், கார்த்தி,பெஞ்சமின்,ஏழுமலை ஆகியோரும் வழக்கு தொடுத்து உள்ளனர். இந்த வழக்குகளில் எல்லாம் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி கல்யாணசுந்தரம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளார்.