தமிழ் திரைப்பட துறையில் இருக்கும் இயக்குநர்களுக்கு என்ன கொரியன் திரைப்பட இயக்குநர்களை விட அறிவு குறைவாகவா உள்ளது என இயக்குநர் மிஷ்கின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேட்டி ஒன்றில் பேசிய அவர், மணிரத்னம், சங்கர், பாலசந்தர் போன்றவர்களுக்கெல்லாம் அறிவு குறைவா என்ன. எதற்கு நாங்கள் கொரியன் அல்லது பிற மொழிகளை பார்த்து காப்பியடிக்க வேண்டும். கொரியன் இயக்குநர்கள் மிக திறமையானவர்கள் தான்.
ஆனால் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல தமிழ் இயக்குநர்களாகிய நாங்கள். தமிழ் இயக்குநர்கள் சோடை போகவில்லை என்றார். நான் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் என்றெல்லாம் நான் பிரித்து பார்க்கமாட்டேன். அதே போல விமர்சிப்பது அவரவர் உரிமை. சமூகத்தில் கண்டிப்பாக விமர்சனம் என்று ஒன்று இருக்க வேண்டும். யாராவது என்னை நீ நல்லவன், நன்றாக வேலை செய்கிறாய் என்று சொன்னால் எனக்கு சுத்தமாக பிடிக்காது. உன்னிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று என்னை சுட்டிக்காட்டினால் அவர்களை உற்று பார்ப்பேன்.
அதே போல எதிர்காலத்தை நினைத்து நான் கவலைப்பட்டதே இல்லை ஏனென்றால் எனக்கு எந்த ஒரு லட்சியமும் கிடையாது. எனது வாழ்வின் மிகப்பெரிய சந்தோசம் புத்தகங்கள் படிப்பது தான். அதேபோல எனக்கென்று ஒரு பைசா கூட சேர்த்து வைக்கவில்லை.
ஒரு ரூபாய் கூட இல்லாமல் தான் சினிமாவிற்கு வந்தேன். பல கோடிகளை சம்பாதித்தேன். தற்போது எனக்கென்று காசு சேர்த்து வைக்கவில்லை. என் திறமையை மதித்து அடுத்த படம் கொடுக்க தயாரிப்பாளர் இருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் என்றார் மிஷ்கின்.