அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சிவகார்த்திகேயன், தற்போதைய காலகட்டத்தில் எதை எல்லாம் சாப்பிட கூடாதோ, அதையெல்லாம் தான் வெளியில் கடை போட்டு விற்கிறார்கள் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் எனக்கும் ஃபிட்னஸ்க்கும் ரொம்ப தூரம் என குறிப்பிட்டார். நமக்கு இருக்கும் ஸ்ட்ரெஸ் மற்றும் உணவு பழக்கங்களுக்கு மத்தியில் உடலை அர்னால்டு போல வைத்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறோம். நான் ஒவ்வொரு நியூ இயர்க்கும் தவறாமல் எடுக்கும் உறுதிமொழி இந்த வருடம் ஜிம்மிற்கு சென்று சேர்கிறோம்.வருடம் முடிவதற்குள் எப்படியாவது சிக்ஸ் பேக் வைக்கிறோம் என்று என்னை நானே ஊக்குவித்து கொள்வேன்.
இதற்காக பல ஜிம்களில் பணம் கட்டியுள்ளேன். அதுவும் 3 மாதத்திற்கெல்லாம் பணம் கட்டமாட்டேன். ஒரு வருடத்திற்கான ஜிம் கட்டணம் முழுவதையும் கட்டி விடுவேன். இப்படிதான் ஜிம் ஒன்றில் பணம் கட்டிவிட்டு முதல் நாள் அங்கு சென்றேன். உங்களுக்கு squat செய்ய தெரியுமா என்று கேட்டார்கள்.
எனக்கு தெரியுமே என சொல்லி விட்டு வெறி கொண்டு, 100 squat செய்து விட்டேன். கடைசியில் என்னால் நடக்க முடியாமல் போக, என்னை கை தாங்கலாக கூட்டி சென்று காரில் உட்கார வைத்தனர். அதன் பிறகு அந்த ஜிம் இருக்கும் திசையை எட்டி கூட பார்க்கவில்லை என கூறியதும் கூட்டத்தினர் சிரித்தனர்.
இது மாதிரியே இன்னும் சில ஜிம்களுக்கு சென்று நான் பணம் கட்டுவதும், பின்னர் அங்கு தொடர்ந்து செல்ல இயலாமல் ஜிம்மில் இருந்து நின்று விடுவதும் சிறிது காலம் தொடர்கதையானது. பின்னர் ஒரு கட்டத்தில் அடிப்படை உடற்பயிற்சிகளை கற்று கொண்டு தேவைப்படும் போது ஜிம்மிற்கு சென்று வருகிறேன் என்றார்.
என்னுடைய ட்ரைனர் எனக்கு எப்போதும் சொல்வது, ஜிம்மில் செய்யும் ஒர்கவுட் 30 சதவீதம் தான். மீதி 70 சதவீதம் உங்களது உணவு பழக்கம் மற்றும் தூக்கம் ஆகியவற்றில் தான் உள்ளது என்பார் என தெரிவித்தார்.