பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018ம் ஆண்டில் வெளியான திரைப்படம் காலா. இதில் ரஜினியின் காதலியாக நடித்திருந்தார் பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி.
இவர் தனது சமீபத்திய பேட்டியில் காலா படத்தில் நடித்த பிறகு தான் தென்னிந்திய உணவுகளுக்கு அடிமையாகி விட்டதாக கூறியுள்ளார். நான் வடஇந்தியாவை சேர்ந்தவள். காலாவில் நடிப்பதற்கு முன் வரை வட இந்திய உணவுகள் மட்டுமே சாப்பிட்டு வந்தேன்.
ஆனால் தென்னிந்திய திரைப்பட குழுவினருடன் இணைந்து காலாவில் பணியாற்றியதால், தென்னிந்திய உணவு வகைகளை ருசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது முதல் இப்போது வரை வடஇந்திய உணவுகளை விட, தென்னிந்திய உணவுகளையே அதிகம் சாப்பிட்டு வருகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் சினிமாவிற்கு கவர்ச்சி மட்டும் போதாது, பல வகையான திறமைகளும் வேண்டும். அப்போது தான் திரைதுறையில் நிலைத்து நிற்க முடியும் என்றார்.