நடிகர் ரஜினிக்கு விசா வழங்க மறுத்ததாக வெளியான தகவலை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், சென்னை மற்றும் டெல்லி ஆகிய இரு உயர் அதிகாரிகளுடமும் இது குறித்து விசாரித்தாகவும், அவ்வாறான எவ்வித சம்பவங்களும் இடம்பெறவில்லை என்றும் கூறினார்.
இலங்கைக்கு வருவதற்காக ரஜினியிடமிருந்து எவ்வித விசா கோரிக்கையும் வரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ரஜினிக்கு விசா வழங்க முடியாது என இலங்கை தரப்பில் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.