பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் ('Tanhaji: The Unsung Warrior') திரைப்படம், மூன்று நாளில், கோடிக்கணக்கில், வசூலை வாரிக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்ஹாஜி திரைப்படம், 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. மனைவியும் நடிகையுமான கஜோல் கதாநாயகியாக நடிக்க, தாமே, தயாரித்து, நடித்துள்ளார் அஜய் தேவ்கன்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் படைத்தளபதியாக இருந்த தன்ஹாஜி கதையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுத் திரைப்படமான தன்ஹாஜி, ரிலீஸ் ஆன மூன்று நாட்களில், சுமார் 62 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாகவும், நாளுக்கு, நாள் கூட்டம் அதிகரித்து வருவதாகவும், பாலிவுட் திரைப்பட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.