அட்டகத்தி, முண்டாசுபட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதா நாயகியாக நடித்துள்ள நந்திதா,தனக்கு இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுப்பதாக புகைப்படத்துடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அட்டகத்தி, முண்டாசுபட்டி, இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் நந்திதா ஸ்வேதா.
தனக்கென தனியாக ஒரு யூடியூப் சேனல் நடத்திவரும் நடிகை நந்திதா ஸ்வேதா, தான் படப்பிடிப்பு தளங்களில் செய்யும் சேட்டைகளை வீடியோவாக பதிவிட்டுவருகிறார்.
சமூக வலைதளங்களான முக நூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் ஆக்டிவாக வலம் வரும் நடிகை நந்திதாவுக்கு இன்ஸ்டாகிராம் இடியட் ஒருவனால் சிக்கல் நேர்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடரும் வாஞ்சி செழியன் என்ற இளைஞர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வைகையிலும் தனக்கு குறுந்தகவல் அனுப்புவதாக குறிப்பிட்டுள்ள நந்திதா, இளைஞரின் புகைபடத்துடன் இஸ்டாகிராமில் புகார் ஒன்றை தெரிவித்து பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அவர் நடிகை நந்திதாவுடன் எல்லைமீறி உரையாடிய அந்த சாட்டிங் தகவலையும் பதிவிட்டுள்ள நந்திதா, வாஞ்சி செழியன் போன்ற நபர்களை என்ன செய்வது இவர்களுக்கு குடும்பம் இல்லையா என்றும் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
அதவது மீடூ புகார் பாணியிலேயே நடிகை நந்திதா இந்த புகாரை சமூக வலைதளங்களில் பரப்பி அந்த இளைஞருக்கும் அவருடன் இருக்கும் நண்பர்களுக்கும் புதுவித தண்டனை கொடுத்திருப்பதாக கூறப்படுகின்றது.