1980-ம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயசாந்தி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிரடி திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். இவர் தீவிர அரசியலில் நுழைந்த பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிற்கு தாயாக தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்பட வாய்ப்பு குறித்து பேட்டியளித்த விஜயசாந்தி, பல ஆண்டுகளாக மீண்டும் படங்களில் நடிக்க வருமாறு பல அழைப்புகள் வந்தன. ஆனால் மனதிற்கு பிடித்த கதாபாத்திரம் அமையாததால், நடிப்பதை தவிர்த்து வந்தேன் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர், எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் இஷ்டம் தான். ஆனால் நான் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய முடிவெடுத்து விட்டேன். எனக்கென்று குழந்தைகள் வந்துவிட்டால் பொதுநலம் மறைந்து, சுயநலம் அதிகமாகிவிடும்.
எனவே குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டாம் என முடிவெடுத்து என் கணவரிடம் கூறினேன். பெருந்தன்மையுடன் அவரும் அதை ஏற்று கொண்டார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குழந்தை, குடும்பம் இல்லாததால் சுயநலமின்றி மக்களுக்கு தொண்டு செய்தார். அவரைப் போவே நானும் அரசியலில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என கூறியுள்ளார் விஜயசாந்தி