ஆன்லைன் மூலம் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யும் தமிழக அரசின் திட்டத்துக்கு நடிகர் டி. ராஜேந்தர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படத்துறை அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும்,விரைவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து திரைப்படத்திற்கு விதிக்கப்படும் 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் கூறினார்.
அரசியலில் ரஜினியும்,கமலும் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளதாகவும், எனினும் அரசியலில் வெற்றி பெற சிறிது அதிர்ஷ்டம் வேண்டும் என்றும் டி. ராஜேந்தர் குறிப்பிட்டார்.