RJ பாலாஜி இயக்கும் "சூர்யா 45" திரைப்படத்திற்கு பிரபல பாடகர்கள் திப்பு, ஹரிணி தம்பதியின் மகனான சாய் அபியங்கரை இசையமைப்பாளராக படக்குழு அறிமுகம் செய்தது.
இந்த படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்று கூறப்பட்ட நிலையில், சாய் அபியங்கர் படத்தில் இணைந்துள்ளார்.
சாய் அபியங்கர் இசையமைத்த ஆச கூட பாடல் இன்ஸ்ட்டாகிராமில் ட்ரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.