தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திக்கேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு நிலைமாலை அணிவித்து அரிவாள் சாற்றி வழிபாடு நடத்தினார்.
அப்போது பூரண கும்ப மரியாதை அளித்த அர்ச்சகர்கள் அவருடன் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கோவிலை விட்டு வெளியே வந்த சிவகார்த்திக்கேயனுடன் அங்கிருந்த பக்தர்கள் பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.