இந்தியன்-2 படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில், இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகம் வந்து 28 ஆண்டுகளானாலும் அதே ஊழல், அதே கரப்சன் தான் இருக்கிறது என்று கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, இரண்டாம் பாகம் எடுக்க இன்றைக்கும் தங்களுக்கு கருவை கொடுத்து கொண்டு இருக்கும் அரசியலுக்கு நன்றி என்றார். இப்போதும் ஊழல் இருப்பதற்கான முக்கிய காரணமே நாம் தான் என்றும், நாம் இல்லாமல் அவர்களால் தனியாக ஊழல் செய்ய முடியுமா என்றும் அவர் கூறினார்.