தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் , வளர்ச்சி கண்டதற்கு பிறகுதான் சினிமா தளர்ச்சி அடைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டிய ரட்சகன் இயக்குனர் பிரவின்காந்தி சினிமாவில் சாதியை சொல்பவன் சமுதாயத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன் என்று கூறினார்.
சென்னை சாலிகிராமத்தில் நடந்த கவுண்டம்பாளையம் திரைப்பட முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, சாதியை ஒழிக்கவேண்டும் என்றால் பள்ளிகளில் சாதிசான்றிதழை ஒழியுங்கள் என்றும் நாடககாதல் என்பதும் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்வதும் ஒன்னுதான் என்றும் ஆவேசமாக பேசினார்.
தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குனர்கள், வளர்ச்சி கண்டதற்கு பிறகுதான் சினிமா தளர்ச்சி அடைந்துவிட்டதாக ரட்சகன் படத்தின் இயக்குனர் பிரவின் காந்தி குற்றஞ்சாட்டினார்.
சின்னக்கவுண்டர் படம் வந்த போது சாதி பிரச்சினை வந்ததா? என்று கேள்வி எழுப்பிய இயக்குனர் ஆர்.வி உதயகுமார் அதை எல்லோரும் கொண்டாடினார்கள் என்றும் உலகத்திலேயே உயர்ந்த சாதி சினிமாசாதி தான் என்றார்.