செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கலங்க வைத்த களங்கமில்லா.. கருப்பு நிலா..!

Dec 30, 2023 06:25:01 AM

தமிழ் திரை உலகில் புரட்சி கலைஞராக வலம் வந்து அரசியலில் கேப்டனாக உயர்ந்து தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்த பெருமைக்குரிய விஜயகாந்தின் திரையுலகம் மற்றும் அரசியல் பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராமானுசபுரத்தில் பிறந்து மதுரையில் தனது தந்தை நடத்திய அரிசி ஆலையை கவனித்து வந்த விஜயராஜ் அழகர் சாமி, தன்னுடைய பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டு 1979ஆம் ஆண்டு அகல் விளக்கு என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்தார்.

தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை.. சிவப்பு மல்லி போன்ற படங்கள் நல்ல பெயரை பெற்றுக்கொடுக்க.. 1984ஆம் ஆண்டு மட்டும் வைதேகி காத்திருந்தாள் என்ற பிளாக் பஸ்டர் படம் உள்பட 18 படங்களில் நடித்தார்..

1985ஆம் ஆண்டு ஊமை விழிகள் உள்ளிட்ட 15 படங்களில் நடித்தார். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான அம்மன் கோவில் கிழக்காலே மாபெரும் வெற்றி பெற்றது..

உழவன் மகன் படம் தமிழ் திரை உலகின் அப்போதைய சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கே கடும் போட்டியை கொடுத்து வசூலில் சாதனை படைத்தது..

அவரது திரைப்படங்களின் வெற்றிக்கு, அவரது ஆருயிர் நண்பரான அ.செ.இப்ராஹிம் ராவுத்தர், பெரும் துணையாக இருந்தார். திரை உலகிற்கு வரும் புதியவர்களுக்கு 3 வேலையும் வயிறார உணவு வழங்கியவர் விஜயகாந்த்..

திரைப்பட கல்லூரி மாணவர்களின் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த விஜயகாந்த், புலன்விசாரணை மூலம் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை அறிமுகப்படுத்தினார்..

தமிழ்த்திரை உலகில் 100ஆவது படம் யாருக்கும் வெற்றி பெற்றதில்லை என்ற சென்டிமெண்டை தனது கேப்டன் பிரபாகரன் படம் மூலம் தகர்த்தெறிந்தவர் விஜயகாந்த்..

கேப்டன் பிரபாகரன் மூலம் சரத்குமாரையும், செந்தூரபாண்டி மூலம் நடிகர் விஜய்யையும், பெரியண்ணா மூலம் சூர்யாவையும், வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்த்து, திரைவாழ்க்கையில் அவர்கள் முன்னனி நடிகர்களாக ஜொலிக்க துணை நின்றவர் விஜயகாந்த்..

எம்.ஜி.ஆர் பாணியில் ரசிகர் மன்றங்களை பலப்படுத்திய விஜயகாந்த், போலீஸ் வேடத்தில் மிடுக்காக வந்து ரசிகர்களை கவர்ந்தவர்..

படம் முழுவதும் வேட்டி சட்டையுடன் மண் மனத்துடன் நடித்த சின்னகவுண்டர் திரைப்படம் 200 நாட்களை கடந்து பட்டித்தொட்டியெங்கும் வெற்றியை பறைசாற்றியது..

திரைப்படங்களில் கால்களால் எகிறிக்குதித்து தாவி அடிக்கும் புது பாணியை தனது படங்களில் அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த்..


20 படங்களுக்கு மேல் பெரிய வெற்றியை தராமல் சுமாராக போனாலும் 'வல்லரசு' மூலம் தனது ஆக்சன் ஹீரோ இமேஜை மீண்டும் அட்டகாசமாக தூக்கி நிறுத்தினார்..

வானத்தை போல படம் மூலம் குடும்பத்து ரசிகர்களை தனதாக்கினார். ரமணா படம் அவரது திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவரை நடிகரில் இருந்து அரசியல் தலைவராக அங்கீகரிக்க வைத்தது

நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பேற்று, பல ஆண்டுகளாக இருந்து வந்த நடிகர் சங்க கடனை, நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தார்.

காவிரி பிரச்சனைக்காக நெய்வேலியில் திரை உலகினரை திரட்டி போராட்டம் நடத்தினார். 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

2006ஆம் ஆண்டு விருத்தாசலம் தொகுதியில் இருந்தும், 2011ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்தும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்த்தும் கிடைத்தது. 

தொடர்ந்து., அரசியல்., சினிமா என இரட்டைக் குதிரையில் பயணித்த விஜயகாந்த்., விருதகிரி என்ற பெயரில் ஒரு படத்தை தானே இயக்கி நடித்தார்.

2010ஆம் ஆண்டுக்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் அரசியலில் கவனம் செலுத்திய விஜயகாந்த். 2016 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு உடல் நலக்குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்...

தமிழ் திரை உலகின் கருப்பு நிலா உடல் நலக்குறைவால் மறைந்தாலும் அவர் செய்த தர்மத்தாலும், தானத்தாலும், போராடும் குணத்தாலும் என்றும் அவர் புகழ் மங்காமல் நிலைத்திருக்கும்...


Advertisement
சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என நீதிமன்றத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா உறுதி..
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படம் பொங்கலுக்கு ரிலீஸ்
திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சூரி
நடிகர் தனுசுக்கு கடிதம் எழுதியுள்ள நயன்தாராவுக்கு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கேள்வி
தனுசுக்கு என் மீது தனிப்பட்ட வெறுப்பு.. 3 நொடி வீடியோவுக்கு ரூ.10கோடி கேட்கிறார் தனுஷ் - நயன்தாரா
திராவிடம், தமிழ் தேசியம் இரண்டும் 2 கண்கள் அல்ல - சரத்குமார்
நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) உடல்நலக்குறைவால் காலமானார்
உலகநாயகனுக்கு இன்று 70வது பிறந்தநாள்..
கேரள ரசிகர்களிடம் மண்டியிட்டு அன்பை வெளிப்படுத்திய சூர்யா.!
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" என்ற பெண் சிப்பிபாறை நாய் பேருந்து மோதி உயிரிழப்பு.!

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement