பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் என்பவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனிதா விஜயகுமாரின் முகத்தில் ஓங்கி அறைந்து விட்டு மர்ம நபர் ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது
படப்பிடிப்பின்றி வீட்டில் பிரீயாக இருப்பவர்களையும்... எந்த வேலையுமின்றி தங்கள் செயல்பாடுகளால் பிரபலமானவர்களையும் செலபிரிட்டியாக்கி 100 நாட்கள் ஒரே வீட்டிற்குள் அடைத்து வைத்து அவர்களது நடவடிக்கைகளை ஊருக்கு படம் பிடித்துக் காட்டும்
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் வனிதாவின் மகளுக்கு டப்க் கொடுத்த பிரதீப் என்பவர் அண்மையில் பெண்களுக்கு ஆபத்தானவர் என்று கூறி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் அடையாளம் காணாத நபரால் நடிகை வனிதா விஜயகுமார் கடுமையாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் வனிதா வெளியிட்டுள்ள பதிவில், மர்ம நபர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அந்த நபர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளராக இருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 7 தொடர்பான தமது விமர்சன நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தமது சகோதரி சவுமியாவின் வீட்டு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை நோக்கிச் சென்ற போது திடீரென தமக்கு முன் வந்த ஒரு நபர், ரெட் கார்டு கொடுக்கறீங்களா, அதுக்கு நீ சப்போர்ட் வேற.. என்று கூறி தமது முகத்தில் ஓங்கி அடித்து விட்டு தப்பியதாக வனிதா குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலால் தனது முகத்தில் ரத்தம் கொட்டியதாகவும் முதலுதவி செய்த பின், தன்னை தாக்கியவனை அடையாள காண முடியவில்லையே என்ற கோபத்துடன் வீட்டுக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
தம்மை தாக்கியவன் பைத்தியக்காரத்தனமாக சிரித்தது இப்போதும் தன் காதுகளில் எதிரொலித்து வருவதாக அவர் கூறியுள்ளார். கோளாறான நபர்களை ஆதரித்தவர்களுக்கு ஆபத்து மிக அருகில் நெருங்க விட்டதாகவும் வனிதா எச்சரித்துள்ளார்.
தான் வலியில் இருப்பதாகவும், ஓய்வெடுப்பதாகவும் கூறியுள்ள வனிதா, இப்போதைக்கு இது தொடர்பாக பேட்டியளிக்க தயாராக இல்லை என்றும் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் பற்றி காவல் துறையிடம் புகார் தெரிவிக்குமாறு தமது சகோதரி சவுமியா கூறியதாக தெரிவித்துள்ள வனிதா, அந்த நடைமுறையில் தான் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், அதற்குப் பின் வனிதா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தம்மீது உடனடியாக அக்கறை காட்டி உதவி செய்த தமிழ்நாடு காவல் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளால் பலரை ஆட்டம் காணச்செய்தவர் வனிதா விஜயகுமார் என்பது குறிப்பிடதக்கது.