ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்திருந்த விநாயகன் கேரளாவில் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் அவருக்கும் மனைவிக்கும் இடையே பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது பற்றி விசாரிக்க வீட்டுக்கு வந்த பெண் காவலரை விநாயகன், அவமரியாதையாகப் பேசினார் என்பது புகார் ஆகும். உடனே காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு காவல் அதிகாரியைத் தாக்கியதாகத் கூறப்படுகிறது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட விநாயகன், மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.