தான் மது குடிப்பதை நிறுத்தி ரொம்ப நாட்களாகி விட்டதாக நடிகர் விமல் தெரிவித்துள்ளார். எனினும், தினமும் தான் ஒவ்வொரு இயக்குனராக கூட்டிசென்று சரக்கடித்து விட்டு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்புவதாக சிலர் அவதூறு பரப்புவதாக அவர் கூறியுள்ளார்.
சென்னை வடபழனி பிரசாத் லேபில் தான் நடித்துள்ள துடிக்கும் கரங்கள் திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சியின் போது விமல் இதனைத் தெரிவித்தார்.
வாய்க்கு வந்ததையெல்லாம் யூ டியூபர்கள் சிலர் எழுதி விடுவதாக தெரிவித்த நடிகர் சவுந்தரராஜா, யூ டியூபர்களுக்கு ஒரு எக்ஸாம் வைக்க வேண்டுமென அரசுக்கு தான் கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார்.