ஜெயிலர் படம் வெளியானதைத் தொடர்ந்து இமய மலைக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
அங்கு அவரைக் காண பெருமளவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். சில நிமிடங்கள் ரசிகர்களுடன் உரையாடிய ரஜினி, பலத்த பாதுகாப்புடன் கோவிலுக்கு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.
குளிருக்காக கையில் உறைகளையும் கழுத்தில் மப்ளரையும் கட்டியிருந்த ரஜினி, படிகளில் ஏறியபடி கோவிலுக்கு சென்றவீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி உள்ளது.