ரஜினியின் சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு சில நடிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலில், பேரைத் தூக்க நாலு பேரு, பட்டத்தைப் பறிக்க நூறுபேரு என்றும் உயிரைக் கொடுக்க கோடி பேரு இருப்பதாக பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.
ரஜினியின் ஜெயிலர் படத்தின் 2-வது சிங்கிள் பாடல் வெளியாகி யூடியூப்பில் அதிக பார்வைகளை பெற்று வருகின்றது.
டைகர் ஹா ஹக்கூம்.. என்ற கர்ஜனையுடன் ஆரம்பிக்கும் இந்த பாடலில் கடந்த சில மாதங்களாக தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் யார் என்று பேசப்பட்ட சர்ச்சைகளுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உன் அலும்ப பார்த்தவன்.. உங்கொப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும் .. பேரனும் ஆட்டம் போட வைப்பவன்.. பேர தூக்க நாலு பேரு... பட்டத்தை பறிக்க நூறுபேரு... என்றும் குட்டிச்சுவத்த எட்டிப்பார்த்தா உயிரை கொடுக்க கோடி பேரு..! என்று பாடலாசிரியர் சூப்பர் சுப்பு எழுதியுள்ள பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.
இந்த பாடலில் இடம் பெற்றுள்ள சில வரிகள் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டவர்களை தாக்கி எழுதப்பட்டிருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
முதல் சிங்கிளான காவாலா பாடல் 5 கோடி பார்வையை நெருங்கி உள்ள நிலையில், இந்த பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.