நாற்பது ஆண்டுகளாக மணமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த பாலிவுட் நடிகர்கள் தர்மேந்திராவும் அவர் 2வது மனைவி ஹேமா மாலினியும் கடந்த சில ஆண்டுகளாக தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற சன்னிடியோலின் மகன் திருமண விழாவிலும் ஹேமா மாலினி அவர் மகள்கள் ஈஷா தியோல், அஹானா ஆகியோர் கலந்துக் கொள்ளவில்லை.
இது குறித்து செய்தியாளர்களிடம் அண்மையில் மனம் திறந்த ஹேமா மாலினி, இப்படி தனியாக வாழ வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை, கணவர் பிள்ளைகள் என்று வாழத்தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார் என்று கூறினார்.
ஆனால் அப்படி நேரும் போது அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.தர்மேந்திராவுடன் நல்லுறவு நீடிப்பதாகவும் ஹேமாமாலினி கூறியுள்ளார்.