திரையரங்குகளில் ஜனவரி 13ம் தேதி முதல் 16ம் தேதி வரையில் துணிவு, வாரிசு படங்களை அதிகாலை 4 மணி முதல் 5 மணி காட்சிகளில் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது.
மேலும், தியேட்டர் வளாகங்களில் வைக்கப்படும் கட் அவுட்டுகள், பேனர்களின் மீது பால் ஊற்றி கொண்டாட அனுமதி கிடையாது என்றும், டிக்கெட், பார்க்கிங் கட்டணங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு டிக்கெட்டின் பின்புறமும் புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் தொலைபேசி எண், இ-மெயில் முகவரியும் அச்சிடப்பட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.