"ரசிகர்களுக்கு எனது டான்ஸும், நடிப்பும் போதை என்கின்றனர்; எனக்கு ரசிகர்கள் தான் போதை" என்று வாரிசு பட விழாவில் பேசிய விஜய் தனக்கு 90-களில் இருந்து ஒரு நடிகர் போட்டியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
வாரிசு படவிழாவில் பேசிய நடிகர் விஜய், நம்ம போற பயணம் நிறைவா இருக்கணும் என்றால் நாம் போற பாதை சரியா இருக்கணும் என்று சொல்வார்கள். அந்த மாதிரி எனக்கு நிறைய அன்பு கொடுத்து இருக்கிறீர்கள்.
உங்களுக்கு எல்லாம் முத்தம் கொடுக்க எனக்கு ஒரு ஸ்டைல் மாட்டியது. இனிமே இது தான். என்று கூறி ரஞ்சிதமே பாடல் போல ரசிகர்களுக்கு பறக்கும் முத்தமிட்டார்.
யோகி பாபு ஒரு காலத்தில் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விடணும் இருந்தார். இப்போ யோகி பாபு வை ஒரு படத்திலாவது நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அந்த வளர்ச்சி சந்தோஷம். குஷ்பூ மேம்ம பார்த்ததும் தனது தோழியுடன் சின்னத்தம்பி படம் பார்த்த ஞாபகம் வந்துருச்சி என்று நகைச்சுவையாக கூறினார்
அன்பு தான் இந்த உலகத்தை ஜெயிக்க கூடிய ஆயுதம். அதில் ஒன்னு உறவுகள், மற்றொன்று நம்மை விட்டு கொடுக்காத நண்பர்கள். இந்த இரண்டு உறவுகள் இருந்தாலும் போதும்.
"ரசிகர்களுக்கு எனது டான்ஸும், நடிப்பும் போதை என்கின்றனர்; எனக்கு ரசிகர்கள் தான் போதை" என்று தெரிவித்தார் விஜய். 30 வருட பயணம் வெற்றிக்கு பின்னால் இருக்கும் விஷயம்... பிரச்சினைகள் பழகி போச்சு..! என்ற விஜய்
பிரச்சனைகள் வருகிறது எதிர்க்கிறார்கள் அப்போ நாம் சரியான பாதையில் தான் போகிறோம். தேவையான விமர்சனமும் தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும் என்றார்
1990 களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார் என்று கூறி ரசிகர்களிடம் டெம்ப்டை ஏற்றிய விஜய், போக போக அவர் ஒரு சீரியசான போட்டியாளராக இருந்தார் என்றும் அவரை தாண்ட வேண்டும் என நானும் போட்டி போட்டி ஓடினேன் என்று கூற யார் பெயரை சொல்லப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, 1992ல் உருவான அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய் என்றார்.
ஜெயிக்க வேண்டும் என்ற போட்டியாளர் உங்களுக்குள் இருக்க வேண்டும். அது தான் உங்களை உயர்த்தும். நீங்கள் தான் உங்களுக்கான போட்டியாளர் என்று கூறிய விஜய், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக
ரஞ்சிதமே பாடலை பாட ரசிகர்களும் கூட சேர்ந்து பாடினர். பின்னர் ரசிகர்கள் எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்
இதற்கிடையே விஜய் தான் ரசிகர்களுடன் இருப்பது போன்று செல்பி வீடியோ ஒன்றை எடுத்து டுவிட்டரில் பகிர்ந்தார். பின்னர் சிறிய பாராஷூட் மூலம் பறக்கவிடப்பட்ட சாக்லேட்டை ரசிகர்கள் போட்டிப் போட்டு பிடித்துச்சாப்பிட்டனர்