நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு காய்ச்சலும் இருமலும் இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் கமல்ஹாசன் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.