ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சியில் பங்கேற்று மும்பை திரும்பிய நடிகர் ஷாருக்கான் 18 லட்சம் ரூபாய் மதிப்புடைய 6 விலை உயர்ந்த சொகுசு வாட்சுகள் வைத்திருந்ததற்காக சுங்கத்துறை அதிகாரிகள் அவரை சுமார் ஆறுமணி நேரம் நிறுத்தி வைத்து விசாரித்தனர்.
பின்னர் ஆறு லட்சத்து எண்பத்து மூன்றாயிரம் ரூபாய் சுங்கவரி செலுத்திய அவரை விடுவித்தனர்.இதே போல் ஷாருக்கானின் பாதுகாவலரும் உதவியாளரும் நிறுத்தி வைக்கப்பட்டனர்.