சன்னிலியோன் கதாநாயகியாக நடித்துள்ள "ஓ மை கோஸ்ட்" திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்த சன்னி லியோனை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பிறகு, சன்னி லியோனின் உதவியால் இயங்கும் ஆதரவற்ற ஆசிரம குழந்தைகள் அவரை பற்றி பேசிய காணொளி காண்பிக்கப்பட்டது.
அப்போது ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிய சன்னி லியோன் மேடையிலேயே கண் கலங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜி.பி முத்து, தனக்கு சன்னி லியோன் என்றால் யார் என்றே தெரியாது எனவும் நயன்தாரா, சிம்ரன் உடன் நடிக்க ஆசையாக இருக்கிறது எனவும் கூறினார்.
பிறகு, சன்னி லியோனுடன் சேர்ந்து மேடையில் நடனமாடிய ஜி.பி.முத்து, அவருக்கு பால்கோவா ஊட்டிவிட்டார்.