'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அணிந்திருந்த புடவைகள் அனைத்தையும் ஏலம் விட முடிவு செய்திருப்பதாக அந்த படத்தின் இயக்குநர் கௌரி ஷிண்டே அறிவித்திருக்கிறார்.
பாலிவுட் இயக்குநர் ஆர்.பால்கி தயாரிப்பில், கௌளரி ஷிண்டே இயக்கிய இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம், 2012-ல் வெளியானது.
படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்படத்தில் ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகளை ஏலத்தில் விடுவதாகவும், அதல் கிடைக்கும் தொகையை ஏழைச் சிறுமிகளின் கல்விக்காக நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு, நன்கொடையாக வழங்கப்படும் என்றும் இயக்குநர் தெரிவித்திருக்கிறார்