சென்னை வடபழனியில் படவிழா ஒன்றின் மேடையில் தன்னை டாக்டர் என்று கூறிய பெண்ணை, போகிற போக்கில் நடிகர் கஞ்சா கருப்பு என்ன டாக்டர் என்று கேட்டு கலாய்த்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஓங்காரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கஞ்சா கருப்பு , மேடையில் தனக்கு வலது புறத்தில் நின்றிருந்த பெண் ஒருவரிடம் பெயர் விவரம் விசாரிப்பது போல உங்கள் பெயரென்னம்மா ? என்று கேட்க அந்தப்பெண், டாக்டர் காயத்திரி என்று கூற அடுத்த நொடியே கஞ்சா கருப்பு, டாக்டரா ? என்ன டாக்டர் ? என்று திருப்பி கேட்க சுதாரித்துக் கொண்டு சோசியல் சர்வீசுக்காக டாக்டர் பட்டம் பெற்றதாக கூறி அந்தப்பெண் சமாளித்தார்.
உடனே ஓ அந்த டாக்டரா ? என்று கஞ்சா கருப்பு, தன் பாணியில் கலாய்த்தார்
நான் ஒரு படிக்காத முட்டா பய தாம்மா, டாக்டர் பொண்ண கல்யாணம் பன்னிருக்கேனே எப்படிம்மா என்று கஞ்சா கருப்பு கேட்க, அந்த சோசியல் சர்வீசுபட்டம் பெற்ற டாக்டரோ, உங்க ராசி சார் என்று சொன்னார்.