காதல் மனைவி திவ்யா மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி மனைவி தெரிவித்த புகாரை திசை திருப்பிய செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் மீது காதல் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செவ்வந்தி சீரியல் நடிகை திய்வாயை காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கர்ப்பிணியானதும் கவிட்டதாக செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் குடும்ப விவகாரம் என்பதால் அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து தீர்வு காணலாம் அதுவரை பொறுமையாக இருக்கும் படி போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது..
போலீசாரின் அறிவுரையை ஏற்காத அர்னவ், தனது மனைவி திவ்யா மன நலம் பாதிக்கப்பட்டவர் என்ற புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார். கடந்த ஜூலை மாதம் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்று மருந்துச்சீட்டுடன், திவ்யா வீட்டில் வைத்து தன்னுடன் வாக்குவாதம் செய்த வீடியோக்களையும் எடிட் செய்து வெளியிட்டார் அர்னவ்
வீடியோவில் திவ்யா மன உளைச்சலில் பேசும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. பஞ்சு தலையனையால் மனைவி செல்லமாக தட்டியதை கூட செல்லம்மா ஹீரோ தன் மீது நடந்த தாக்குதல் என்று கூறுவது போன்ற காமெடி காட்சிகள் எல்லாம் அந்த வீடியோவில் இடம் பெற்று இருந்தது..
மன நலம் பாதிக்கப்பட்டதற்கு ஜூலை 12 ந்தேதி , திவ்யா சிகிச்சை எடுத்துக் கொண்டதாக அர்னவ் கூறும் நிலையில் , மனநலம் பாதிக்கப்பட்ட திவ்யா எப்படி கர்ப்பிணியானார் ? என்றும் அர்னவ் கூறுவது போல திவ்யா மன நிலை சரியில்லாமல் இருந்த போது பலாத்காரம் செய்யப்பட்டாரா ? என்றும் திவ்யா தரப்பினர் எதிர் கேள்வி எழுப்பி இருந்தனர். அர்னவ்விடம் உள்ள வீடியோக்கள் அனைத்தையும் கைப்பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் போலீசுக்கு திவ்யா கோரிக்கை விடுத்தார்...
இந்த நிலையில் அர்னவ் மீது எஸ்.ஆர்.எம்.சி போலீசார் கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கொடுமைப்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டு குறித்தும் போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்...
போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து சீரியல் ஹீரோ அர்னவ் மனைவியின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.