பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் பட வெளியீட்டிற்கு தடை விதிக்கக்கோரி, டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அப்படத்தில், ராமராக பிரபாசும், ராவணனாக சயிப் அலிகானும் நடித்துள்ளனர்.
அண்மையில் அப்படத்தின் டீசர் வெளியான நிலையில், படத்தில் ராமரும், அனுமனும் தோல் பட்டைகள் அணிந்திருப்பது போல, தவறாக காட்டப்பட்டு இருப்பதாகவும், இதேபோல் ராவணனும் தவறான தோற்றத்தில் காட்டப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.