பொன்னியின் செல்வன் படத்திற்காக பலமுறை குதிரையில் இருந்து விழுந்து எழுந்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்த நிலையில், பொன்னியன் செல்வன் படத்தை பாகுபலியுடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டாம் என்று நடிகர் விக்ரம் பிரபு கேட்டுக் கொண்டார்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் செய்தியாளர்களை சந்தித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். வந்திய தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி, தனது முதல் காட்சி குறித்தும், குதிரையுடன் பழகி அதன் மீது ஏறி நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தானும், ஜெயம் ரவியும் குதிரை மற்றும் யானைகள் மீது ஏறி இறங்குவதற்காக பலமுறை விழுந்து எழுந்ததாக தெரிவித்தார்.
பொன்னியின் செல்வன் படம் பாகுபலி மாதிரியாக இருக்குமா ?என்று கேட்ட போது அந்த படத்துடன் ஒப்பிடவேண்டாம் என்று நடிகர் விக்ரம் பிரபு கேட்டுக் கொண்டார்.