மருத்துவர்களின் அறிவுரையை மீறி, நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் நடித்து வருவதாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோசன் தெரிவித்துள்ளார்.
தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் கிருத்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலிகானும் நடித்துள்ளனர்.
படத்திலுள்ள Alcoholia பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய கிருத்திக் ரோஷன், தமது உடல்நிலையை கருத்தில் கொண்டு, நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டாமென மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதாகவும், ஆனால் இதை சவாலாக எடுத்து கொண்டு, முழு திறனையும் வெளிப்படுத்தி நடித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.