சூரரை போற்று உள்பட 3 தமிழ் திரைப்படங்கள் மொத்தம் 10 தேசிய விருதுகளுக்கு தேர்வாகியுள்ளன.
டெல்லியில் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் அறிவித்தது. சிறந்த திரைப்படமாக சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப் போற்று' தேர்வாகியுள்ளது. அப்படத்தில் நடித்த சூர்யா சிறந்த நடிகராகவும், அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகையாகவும் தேர்வாகியுள்ளார்.
சிறந்த பின்னணி இசைக்கான விருதிற்கு 'சூரரைப் போற்று' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்வாகியுள்ளார். 'சூரரைப் போற்று', 'மண்டேலா' படங்களுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ் திரைப்படம், படத்தொகுப்பிற்கான விருதுகள் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்திற்கு அறிவிக்கப்பட்டன. மேலும், சிறந்த பாடகிக்கான விருதிற்கு அய்யப்பனும் கோஷியும் படத்தில் பாடிய நஞ்சம்மா தேர்வாகியுள்ளார்.