ஹைதராபாத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமெல்லா அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பஞ்சாராஹில்ஸ் ஃபேஷன் ஸ்டுடியோவை நடத்தி வந்த பிரத்யுஷா கரிமெல்லா, தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுக்கும், பாலிவுட்டில் சில நடிகர்-நடிகைகளுக்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணி புரிந்துள்ளார்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடனடியாக அவரது பெற்றோர் மற்றும் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அவரது அறையில் இருந்து கார்பன் மோனாக்சைடு சிலிண்டரை கைப்பற்றிய போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.