சென்னையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடிகர் சங்கத்தின் 66 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. விஷால், குஷ்பு, பொன்வண்ணன், மனோபாலா, சிபிராஜ் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் விஷால், நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளுக்கு 30 கோடி ரூபாய் தேவை படுவதாக தெரிவித்தார்.