புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது திரைப்படப் படப்பிடிப்புக்கு ஏற்ற இடம் புதுச்சேரி என்றும் இங்கு படப்பிடிப்பு நடத்த விருப்பமுள்ளதாகவும் தெரிவித்தார். ஹோட்டல்கள் உட்பட தேவையான கட்டமைப்பு தேவை எனவும் முதலமைச்சரிடம் போனிகபூர் வலியுறுத்தினார்.
ரஜினிகாந்த்தின் 170வது படத்தையும் அஜித்தின் 61 வது படத்தையும் போனிகபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.