தான் ஒரு உளறுவாயன் என்பதால் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் அழைத்தும் கூட அரசியலுக்கு செல்லவில்லை என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் இருந்து ஆந்திர அரசியலில் நுழைந்து, தற்போது ஆந்திர அரசின் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரோஜாவுக்கு பாராட்டுவிழா வருகின்ற 7 ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, ரோஜா தமிழ் நாட்டின் மருமகள் என்றும் தமக்கு முதன் முதலாக ரோஜாப்பூ மாலை போட்டு வரவேற்றதால் அவருக்கு ரோஜா என்று பெயர் வைத்ததாகவும் தெரிவித்தார். ரோஜா தைரியத்தின் உச்சம் என்றும் பல்வேறு நுணுக்கங்கள் தெரிந்தவர், அதனால் ஆர்.கே . செல்வமணி அரசியலுக்கு வந்தால் பெரிய ஆள் ஆவார் என்றும் பாரதிராஜா தெரிவித்தார்
தான் ஒரு உளறுவாயன் என்பதால், மறைந்த தமிழக முதல் அமைச்சர்களான எம்.ஜி.ஆர், கலைஞர் , ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்கு அழைத்த போது கூட தான் செல்லவில்லை என்று தெரிவித்த பாரதிராஜா, செத்தாலும் திரைக்கலைஞனாகவே சாக வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று ஜெயலலிதாவிடம் கூறியதாக தெரிவித்தார்
இந்த பாராட்டு விழாவுக்காக திரை சங்க நிதிகள் செலவிடப்படாது என்றும், இதற்கு என்று தனியாக குழு அமைத்து பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணியின் செலவில் இந்த பாராட்டு விழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.