இரண்டாவது முறையாக கிராமி விருதை வென்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்றது. பெங்களூரை சேர்ந்த ரிக்கி கேஜ், கடந்த 2015ஆம் ஆண்டு முதன் முறையாக கிராமி விருதை வென்றார்.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில், “டிவைன் டைட்ஸ்..” என்ற ஆல்பம் பாடலுக்காக, ஸ்டீவர்ட் கோப்லேண்ட் உடன் சேர்ந்து அவர் விருது பெற்றுள்ளார்.