மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது குட்டி ரசிகைக்கு நேரில் சென்று நடிகர் மம்மூட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அரிய வகை ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பிறந்தநாளை முன்னிட்டு தன்னை சந்திக்குமாறு மம்மூட்டிக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், வேறு காரணங்களாக கொச்சியில் உள்ள அந்த மருத்துவமனைக்கு சென்ற மம்மூட்டியிடம், சிறுமி தொடர்பாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, அவர் உடனே அந்த சிறுமியை நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததுடன் அவருடன் சிறிது நேரம் உரையாடினார். இது தொடர்பாக புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.