நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படம் இன்று அதிகாலை திரையரங்குகளில் வெளியானது.
அஜித்குமாரை நாயகனாக வைத்து போனிகபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் 'வலிமை'.
பொங்கல் தினத்தன்று இந்தப் படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வலிமை திரைப்படம் இன்று காலை 4 மணிக்கு சிறப்புக் காட்சிகளுடன் வெளியானது. திரைஅரங்குகளில் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் அஜித்தின் கட்-அவுட் மற்றும் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.