நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, தனது கணவரும் நடிகருமான கல்யாண் தேவின் பெயரை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்திலிருந்து நீக்கியதுடன், அவரை இன்ஸ்டாவில் பின்தொடர்வதையும் நிறுத்தியுள்ளார்.
ஸ்ரீஜா, கல்யாண் தேவ் இருவரும் அண்மைக்காலமாக கருத்து வேறுபாட்டில் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'சூப்பர் மச்சி' படத்தை விளம்பரப்படுத்த சிரஞ்சீவியும் , ராம் சரணும் முன்வரவில்லை என்ற வருத்தத்தில் கல்யாண் தேவ் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீஜா கல்யாண் என்று இருந்த அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது ஸ்ரீஜா கொனிடேலா என சிரஞ்சீவியின் குடும்ப பெயருடன் மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீஜா கல்யாண் தேவ் இருவரும் 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.