புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நடிகர் அஜித் நடிப்பில் தயாராகியுள்ள வலிமை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிக்கைக்கு வலிமை படத்தை வெளியிட படக் குழு திட்டமிட்டிருந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. கட்டுப்பாடுகளால் வசூல் பாதிக்கப்படுமா என்றும், படத்தை வெளியிடுவது குறித்தும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் தயாரிப்பாளர் போனி கபூர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.