கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு நலமுடன் உள்ளதாக அவர் சிகிச்சைப் பெற்று வரும் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
"நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்" என்ற படத்தின் ஒலிப்பதிவிர்காக அண்மையில் லண்டன் சென்று திரும்பிய வடிவேலுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
மேலும், அவருக்கு ஒமைக்ரான் அறிகுறியாக கருதப்படும் எஸ் ஜீன் மாற்றம் அடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக குறிப்பிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அறிவித்துள்ளது.