நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், சிகிச்சை முடிந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கடந்த நவம்பர் 22ஆம் தேதி கொரோனா உறுதியானதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து, தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்ட இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கொரோனா தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன் எனவும், எத்தனை உள்ளங்கள் என் நலம் குறித்து சிந்தித்தது எண்ணி மகிழ்ச்சியில் இருக்கிறேன் என கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.