செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மன்மதராசா நடன இயக்குனர் கொரோனாவுக்கு பலி..!

Nov 29, 2021 12:16:14 PM

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் நடன இயக்குனர் சிவசங்கர் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியானார். 8 வயது வரை நடக்க இயலாமல் படுத்த படுக்கையாகி, தன்னம்பிக்கையால்  எழுந்து 73 வயது வரை சினிமாவில் ஓயாது உழைத்து நடனத்தால் ரசிகர்களை ஆடவைத்த சிவசங்கரின் வாழ்க்கை பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 800 படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்கு தனது ரசனையான நடன அசைவுகளால் உயிர் கொடுத்தவர் மாஸ்டர் சிவசங்கர்..!

கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள மாஸ்டர் சிவசங்கர், தெலுங்கு சினிமா ஒன்றின் பாடலுக்கு நடனம் அமைக்க ஹைதராபாத் சென்றிருந்தார்.

அப்போது கொரோனா பாதிப்புக்குள்ளான அவர், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி மாஸ்டர் சிவசங்கர் பரிதாபமாக பலியானார்.

சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் 1948 ஆம் ஆண்டு பிறந்தவர் சிவசங்கர். ஒன்றரை வயது குழந்தையாக இருக்கும் போது உறவினரின் கைகளில் இருந்து கீழே விழுந்ததால் முதுகு தண்டில் காயம் அடைந்து 8 வயது வரை படுத்த படுக்கையாகவே கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

மருத்துவரின் முறையான பயிற்சிக்கு பின்னர் எழுந்து நடக்க ஆரம்பித்த சிவசங்கர், தனது தந்தையின் தூண்டுதலால் நடனத்தை சிறுவயதிலேயே பயின்றார். 10 க்கும் மேற்பட்ட பெண்பிள்ளைகளுடன் வளர்ந்ததால் இயற்கையாகவே பெண்களுடைய மேனரிசங்கள் இவருடன் ஒட்டிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இவரது பெண்ணிய மேனரிசத்தின் பின்னணியில், உருவான படம் தான் அஜீத்தின் வரலாறு. விஜய்யின் பூவே உனக்காக படத்தில் அனைத்து பாடல்களுக்கும் சிவசங்கர் மாஸ்டர் தான் நடனம் அமைத்தார்

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட்பாடல்களை சிவசங்கர் மாஸ்டர் கொடுத்திருந்தாலும், நடிகர் தனுஷின் ஆரம்பகாலத்தில் மன்மதராசாவுக்காக சிவசங்கர் மாஸ்டர் அமைத்த நடனம் திரையரங்கில் ரசிகர்களை துள்ளாட்டம் போடச்செய்தது.

தெலுங்கில் வெளியான மகதீரா படத்திற்காக தேசிய விருதை பெற்ற சாதனையாளரான , சிவசங்கருக்கு, வயது 72 ஐ கடந்த நிலையிலும், தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றி வந்தார்.

ஆரம்பத்தில் எழுந்து நடக்கவே முடியாது என்று ஒரு சில மருத்துவர்களால் கைவிடப்பட்டாலும், நம்பிக்கை இழக்காமல் எழுந்து நடந்து, நடனத்தில் தனது முத்திரையை தன்னம்பிக்கையால் பதித்தவர் சிவசங்கர்.

கொரோனா என்னும் பெருந்தொற்று மாஸ்டர் சிவசங்கரின் உயிரை பறித்தாலும், அவரது நடன அசைவுகளில் ஹிட் அடித்த சினிமா பாடல்களின் சாயலாய் என்றென்றும் ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்


Advertisement
நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) உடல்நலக்குறைவால் காலமானார்
உலகநாயகனுக்கு இன்று 70வது பிறந்தநாள்..
கேரள ரசிகர்களிடம் மண்டியிட்டு அன்பை வெளிப்படுத்திய சூர்யா.!
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" என்ற பெண் சிப்பிபாறை நாய் பேருந்து மோதி உயிரிழப்பு.!
அமரன் திரைப்பட குழுவினருக்கு அண்ணாமலை பாராட்டு
கூலி படப்பிடிப்பு தொடங்கும் முன் சிகிச்சை குறித்து ரஜினி கூறினார் - லோகேஷ்
குரங்குப் பெடல் படத்தின் இயக்குனருக்கு புதுச்சேரி அரசு விருது, பரிசு..!
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
இந்திய திரைப்பட அகாடமி விருது விழா.. இந்திய சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் நானிக்கும், சிறந்த பெண் விருதை சமந்தாவிற்கும் கொடுக்கப்பட்டது
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை

Advertisement
Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!


Advertisement