மாநாடு திரைப்படம் பிரச்சனை இல்லாமல் வெளியாவதற்கு சிம்பு மற்றும் அவரது பெற்றோர்கள்தான் முழுக்காரணம் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
படம் வெளியாகும் தேதி குறித்து கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பிற ஃபைனான்சியர்களான உத்தம்சந்த், யாகியா பாய் ஆகியோருடன் சிம்பு, அவரது பெற்றோர் உஷா மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக யாருக்கும் சிக்கல் இல்லாமல் படம் வெளியானதாக திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.