மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் இன்று அரசு மரியாதையுடன் பெங்களூரில் நடைபெறுகின்றன.
காந்தவீரா ஸ்டூடியோ மைதானத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.அங்கு திரண்டு வந்த ரசிகர்கள் தங்கள் கண்களில் நிறைந்த பவர் ஸ்டாருக்கு கண்ணீர் பெருக இறுதி மரியாதை செலுத்தினர்.
புனித் ராஜ்குமார் மறைவையொட்டி, பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.