இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண இருப்பதாக லைகா நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியின் மத்தியஸ்த நடைமுறையில் பங்கேற்பதாக லைகா நிறுவனம் தெரிவித்தது.