67 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடக்கிறது.
2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களுக்காக வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு அவரது கலைச்சேவையை பாராட்டி தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான விருது அசுரன் படத்திற்கும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுசுக்கும் கொடுக்கப்படுகிறது.
சிறந்த துணை நடிகருக்கான விருதை சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை டி.இமான் பெறுகிறார்.
ஜூரி சிறப்பு விருதை பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்தச் செருப்பு படத்திற்கு கொடுக்கப்படுகிறது. விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்குகிறார்.
மணிகர்னிகா - குயின் ஆஃப் ஜான்சி மற்றும் பங்கா ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை கங்கனா ரணாவத் பெற்றார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கங்கனாவிற்கு விருதுகளை வழங்கினார்.
மேலும், 'போன்ஸ்லே' என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை மனோஜ் பாஜ்பாய் பெற்றார். மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோர், சிறந்த இந்தி மொழிப் படத்திற்கான விருதை வென்றது.
அப்படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி விருது பெற்றநிலையில், சுஷாந்த் தங்களை பெருமை அடைய செய்ததாக மேடையில் அவர் உருக்கமாக தெரிவித்தார். மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம்', சிறந்த படத்திற்கான விருதை பெற்றது.