ட்விட்டர் பக்கத்தில் தனது வீடியோவை ஆபாசமாக சித்தரித்து பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பாஜக மகளிர் அணியினர் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் மாட்டுவண்டியில் சென்று கொண்டிருக்கும் போது, சில பெண் நிர்வாகிகள் கீழே விழுந்துவிட்டார்கள் எனவும், அந்த சமயத்தில் தன்னை ஆபாசமாக பதிவு செய்து வீடியோ எடுத்து பரப்பி வருக்கிறார்கள் எனவும், அதை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவதூறு பரப்பும் திமுகவைச் சேர்ந்த ஜெயசந்திரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.